ஹெல்ப் ஏஜ் ஸ்ரீலங்கா (Help Age Srilanka) நிறுவனத்தினால் வெள்ளம் மற்றும் கோவிட்- 19 தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கென ஒரு தொகுதி உணவு பொருட்கள் மற்றும் உணவு அல்லாத பொருட்கள் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களிடம் 28.12.2021 பிற்பகல் 3.00 மணிக்கு யாழ்.மாவட்டச்செயலகத்தில் கையளிக்கப்பட்டது .
இவ் நிவாரணப் பொதிகள் சங்கானை மற்றும் ஊர்காவற்றுறை பிரதேச செயலகங்களுக்காக வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும், இவ் நிகழ்வில் உதவி மாவட்டச் செயலாளர் திருமதி எஸ்.சி.என்.கமலராஜன், நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் எம்.எஸ்.சமிந்த டீ சில்வா (Help Age Srilanka) மற்றும் மாவட்டச்செயலக உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.






