வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் மற்றும் புத்தசாசன,மதவிவகார கலாச்சார அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் , Covid-19 பெருந்தொற்று காலத்தில் செய்தி பரம்பல், ஊடக தர்மம் மற்றும் 2022ஆம் ஆண்டிற்கான ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டதின் சிறப்பான விடயங்களைத் தெளிவுபடுத்தல் தொடர்பான ஊடக சந்திப்பு மற்றும் கலந்துரையாடல் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் 05.01.2021 அன்று யாழ்மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இச்செயலமர்வில் வளவாளராக புத்தசாசன, மதவிவகார கலாச்சார அலுவல்கள் அமைச்சின் சிரேஸ்ட ஊடகச்செயலாளர் ஜெ.யோகராஜ் அவர்கள் கலந்துகொண்டு Covid-19 பெருந்தொற்று காலத்தில் செய்தி பரம்பல், ஊடக தர்மம் மற்றும் 2022ஆம் ஆண்டிற்கான ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டதின் சிறப்பான விடயங்களைத் தொடர்பாக ஊடகப் பண்புகள், செய்தி அறிக்கையிடல், செய்தி திருத்தங்கள்,ஊடகத்துறையிலுள்ள சட்ட ஏற்பாடுகள் ,ஊடகங்களின் சமூக பொறுப்புக்கள் உள்ளிட்ட பல விடயங்கள் விரிவாக தெளிவூட்டப்பட்டதுடன், ஊடகத்துறையில் நடைமுறையில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை எவ்வாறு தீர்வு காணப்பட வேண்டும் என்பது தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இச்செயலமர்வில், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் வ.விமலநாதன், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஸ்டான்லி டீமெல் ,யாழ்மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன்,கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஸ்ரீமோகனன், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் திருமதி ச.மோகநாதன்,வடமாகாண ஆளுநரின் இணைப்புச் செயலாளர் கணேசநாதன் , அரச தகவல் திணைக்கள உத்தியோகத்தர்கள், பிராந்திய ஊடகவியாளர்கள் மற்றும் யாழ் பல்கலைக்கழக ஊடக கற்கைகள் மாணவர்கள் மற்றும் பலரும் கலந்துகொண்டனர்.

05ProvincialMeeting