குறித்த சந்திப்பில் பொதுவான பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. குறிப்பாக யாழ். மாவட்டத்தில் இராணுவத்தினரால் மக்களின் முன்னேற்றம் கருதி பல்வேறுபட்ட அபிவிருத்திப் பணிகள் மற்றும் Covid-19 இடர்காலத்தில் மக்கள் நலனுக்காக இணைந்து செயற்பட்டமைக்காக மாவட்ட அரசாங்க அதிபர் தனது பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்தார்.மேலும்,விவசாய நடவடிக்கைகளில் சேதனப்பசளை உற்பத்தி நடவடிக்கைகள்,வீதி அபிவிருத்தி, நகர சுத்தப்படுத்தல்கள், மக்களின் வாழ்வாதார நடவடிக்கைகள் மற்றும் Covid-19 தடுப்பூசி நடவடிக்கைகள் உள்ளிட்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
மேலும், மக்களின் முன்னேற்றம் கருதி அபிவிருத்திக்காக தங்களாலான முழுமையான ஒத்துழைப்புக்களை தொடர்ந்து வழங்க தயாராக இருப்பதாக யாழ்.மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.





