towndev4யாழ். மாவட்டத்தில் நகர அபிவிருத்தி அதிகார சபையால் முன்னெடுக்கப்படுகின்ற செயற்றிட்டங்களின் தற்போதையநிலை தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் யாழ்ப்பாணம் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.இக்கலந்துரையாடலில் 100 நகர அபிவிருத்தி திட்டம், வல்லைவெளி அழகுபடுத்தும் செயற்றிட்டம், பருத்தித்துறை முனை அழகுபடுத்தும் செயற்றிட்டம், திருவிழா முனையம் ஊறணி வல்வெட்டித்துறை,யாழ்ப்பாண நகர வாகன தரிப்பிட நிர்மாணம், நகர மண்டப நிர்மாணம் உள்ளிட்ட செயற்றிட்டங்களின் தற்போதைய நிலை தொடர்பில் ஆராயப்பட்டது.

மேலும், யாழ் மாவட்டத்துக்கான மைதான தொகுதிகளை உள்ளடக்கிய அபிவிருத்தி தொடர்பாகவும், நல்லூர் பிராமணங்கட்டு குள அழகுபடுத்தல், யாழ் வரவேற்பு வளைவு பகுதி அழகுபடுத்தல் உள்ளிட்ட 2022 ம் ஆண்டில் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ள அபிவிருத்தி பணிகள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இக்கலந்துரையாடலில், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ அங்கஜன் இராமநாதன், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன், நகர அபிவிருத்தி அதிகாரசபையின் வட மாகாண பணிப்பாளர் திசநாயக்க, மேலதிக அரசாங்க அதிபர் ம. பிரதீபன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) சு.முரளிதரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், உதவிமாவட்டச் செயலாளர், நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள்,கௌரவ பிரதேச சபை தவிசாளர்கள், கௌரவ நகரசபை தவிசாளர்கள் உள்ளிட்ட துறைசார் பங்குதாரர்கள் கலந்துகொண்டனர்.
 
towndev1 towndev3 towndev2