IOM அரசசார்பற்ற நிறுவனத்தின் நிதி அனுசரணையில் OFERR(CEYLON) நிறுவனமும் இணைந்து இந்தியாவிலிருந்து 2017ம் ஆண்டுக்குப் பின் மீளக்குடியமர்ந்த மக்களிற்கான வாழ்வாதார உதவிகள் நேற்றைய தினம் (2022.02.01) மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் மூலம் கையளிக்கப்பட்டது.
இந்தியாவிலிருந்து 2017ம் ஆண்டுக்குப் பின் மீளக்குடியமர்ந்த மக்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளுக்கு அமைவாக ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா பெறுமதியான தொழில் உபகரணங்கள் தெரிவு செய்யப்பட்ட ஒன்பது பயனாளிகளுக்கு முதற்கட்டமாக வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
இவ் வாழ்வாதார உதவி வழங்கலில் மேலதிக அரசாங்க அதிபர் ( காணி), நிகழ்ச்சித் திட்ட இணைப்பாளர் (IOM), OFERR (CEYLON) நிறுவன இலங்கைக்கான பணிப்பாளர் மற்றும் OFERR(CEYLON) நிறுவன உத்தியோகத்தர்கள், மாவட்டச் செயலக உத்தியோகத்தர் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.





