8diss1யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களுக்கும் இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர் சங்க பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்றையதினம் (08.02 2022) மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.
மேலும், குறித்த கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள் யாழ். மாவட்ட கிராம உத்தியோகத்தர்கள் மிக சிறப்பான முறையில் தமது கடமைகளை முன்னெடுத்துச் செல்வதாகவும், அதற்கு உதாரணமாக கிராம உத்தியோகத்தர்களுக்கான அலுவலக முகாமைத்துவ போட்டி மற்றும் கடமைகளை பரிசீலனை செய்தல் பிரதேச செயலக ரீதியாக இடம்பெற்று சிறந்த உத்தியோகத்தர்கள் தெரிவு இடம்பெற்றமையை தெரிவித்தார்.

குறித்த கலந்துரையாடலில் கிராம உத்தியோகத்தர்களின் கடமைப் பொறுப்புகள் , நடைமுறையில் கிராம உத்தியோகத்தர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அதற்கான வழிவகைகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது. மேலும், உத்தியோகத்தர்களுக்கான நிர்வாக ரீதியாக தேவையான வசதிவாய்ப்புக்களை பிரதேச செயலகங்கள் ஊடாக ஏற்படுத்திக் கொடுத்தல், மற்றும் இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர் சங்கத்தின் ஊடாக கிடைக்கப்பெறுகின்ற நலன்கள் உள்ளிட்ட விடயங்கள் விரிவாக கலந்துரையாடப்பட்டன.

இக் கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர்(காணி), நிர்வாக உத்தியோகத்தர் மற்றும் கிராம உத்தியோகத்தர் சங்க பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
 
 
8diss2