8worgt1யாழ்ப்பாண மாவட்டத்தில் பெண்களுக்கான உரிமைகள் மற்றும் பால்நிலைசார் வன்முறைகளுக்கு எதிரான செயற்பாட்டுக் குழுவின் 2022ம் ஆண்டிற்கான முதலாவது கலந்துரையாடல் மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் நேற்று (2022.02.08) மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் பிரதம விருந்தினர்களாக அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களும், வடக்கு மாகாண மகளிர் அமைச்சின் செயலாளர் திருமதி.ரூபினி வரதலிங்கம் அவர்களும் கலந்து கொண்டதோடு, பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், உதவி மாவட்டச் செயலாளர், அரசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், மாவட்டச் செயலக பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,பிரதேச செயலக பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், உளவளத்துனை அலுவலர்கள், பொலிஸ் பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும், மாவட்ட அரசாங்க அதிபர் கருத்துத் தெரிவிக்கும் போது "பெண்களுக்கு எதிரான வன்முறைகள் காலங் காலமாக இடம்பெற்று வருவதோடு, அவ் வன்முறைகள் பல்வேறு வடிவங்களில் உள,உடல் ரீதியாகவும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்கு குடும்ப,நிறுவன,சமூக மட்டத்தில் சரியானதொரு விழிப்புணர்வுகளை ஏற்படுத்த எல்லோரும் இணைய வேண்டும்மெனவும், வன்முறையில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான நீதி பிரதேசசெயலகங்களினால் தீர்க்கபட முடியாத போது, மாவட்ட செயலகங்களினூடாகவோ அல்லது ஆளுநரிடம் கோரிக்கைகளினை முன்வைக்க முடியும்

அத்தோடு அதிகரித்த மதுப்பாவனைகளும், போதைவஸ்துக்களும் குடும்ப வன்முறைகளுக்கு முக்கிய காரணம்" எனத் தெரிவித்திருந்தார்.
இக் கலந்துரையாடலில் வடக்குமாகாண மகளிர் அமைச்சின் செயலாளர் கருத்துத் தெரிவிக்கும் போது "பெண்கள் வன்முறைக்கு எதிரான வழக்குகள் நீதிமன்றங்களுக்கு செல்லாமல் அந்த அந்த இடங்களிலேயே அவை தீர்க்கப்படவேண்டியவை எனவும் அந்த கிராமங்களில் அனுபவம் வாய்ந்தவர்களினை இனங்கண்டு ஒரு குழுவினை நியமனம் செய்து அவர்களின் உதவியோடு பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகளுக்கு அவர்களுடைய ஆலோசனைகள் பெற்றுக்கொள்ள கூடியதாக இருக்கும்" எனத் தெரிவித்தார்.
 
8worgt2 8worgt3 8worgt4