அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண மாவட்ட வெளியீட்டுப் பணியகத்தின் அங்குரார்ப்பண நிகழ்வும், யாழ்ப்பாண மாவட்ட பிரதேச ஊடகவியலாளர்களுடனான சினேகபூர்வ சந்திப்பும் வெகுசன ஊடக அமைச்சர் கௌரவ டலஸ் அழகப்பெரும அவர்களின் தலைமையில் 18.02.2022 காலை 9.45 மணிக்கு யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.
குறித்த யாழ்ப்பாண மாவட்ட பிரதேச ஊடகவியலாளர்களுடனான சினேகபூர்வ சந்திப்பில் யாழ் மாவட்டத்தில் இருக்கும் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்து கொண்ட வெகுசன ஊடக அமைச்சர் கௌரவ டலஸ் அழகப்பெரும அவர்கள், அதனைத் தொடர்ந்து அரசாங்க தகவல் திணைக்களத்தின் யாழ்ப்பாண மாவட்ட ஊடகப்பிரிவிற்கான தொலைக்காட்சிப் பெட்டி ஒன்றையும் கையளித்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா, யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித்தவிசாளரும் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவருமான கௌரவ அங்கஜன் இராமநாதன், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சுரேன் ராகவன், பிரதம செயலாளர் எஸ். எம்.சமன் பந்துலசேன, அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் மொஹான் சமரநாயக்க , மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன், மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் மற்றும் மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், அரசாங்க தகவல் திணைக்கள உத்தியோகத்தர்கள், ஊடகவியலாளர்கள், யாழ்.பல்கலைக்கழக ஊடகக்கற்கை மணவர்கள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தார்கள்.

18publi2 18publi1 18publi3