சௌபாக்கியா பற்றிக் உள்ளூர் உற்பத்தி விற்பனை நிலையம் இராஜாங்க அமைச்சர் கௌரவ தயாசிறி ஜயசேகரவினால் 2022.02.21 அன்று யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கபட்டுள்ளது.
மேலும், திறப்பு விழா நிகழ்வில் பற்றிக், கைத்தறி துணிகள் மற்றும் உள்நாட்டு ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சர் கௌரவ தயாசிறி ஜயசேகர அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு விற்பனை நிலையத்தினை திறந்து வைத்துள்ளார்.
நிகழ்வில் நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளர் கௌரவ அங்கஜன் இராமநாதன், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன், பிரதேச செயலாளர் எஸ்.சுதர்சன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.






