World Vision நிறுனத்தினால் சங்கானை மற்றும் சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவுகளில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள "சமூக ஒருங்கிணைப்பை மீளமைத்தல் செயற்திட்டம்" தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் நேற்றையதினம் (22) மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.
இச் செயற்திட்டத்தில் பதினெட்டு சிறுவர் கழகங்கள் தெரிவு செய்யப்பட்டு சிறுவர்களை இனங்காணல், சிறுவர்களின் திறமைகளை வலுப்படுத்தல், தொழிற் பயிற்சிகளை வழங்குதல், சமூக மட்ட பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றிற்கு பொருத்தமான தீர்வுகளை உருவாக்க வழிகாட்டுதல் ஆகியன மேற்கொள்ளப்படவுள்ளது.

மேலும், இச் செயற்திட்டத்தில் வழிப்படுத்துநர்களை வலுப்படுத்தலும் மேற்கொள்ளப்படவுள்ளதோடு, இச் செயற்திட்டதில் சர்வோதயம் நிறுவனமும் இணைந்து செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்டச் செயலாளர், சங்கானை மற்றும் சாவகச்சேரி பிரதேச செயலாளர்கள், மாவட்ட பணிப்பாளர் (World Vision), செயற்திட்ட முகாமையாளர்(World Vision) மற்றும் world Vision நிறுவன உத்தியோகத்தர்கள், சர்வோதயம் நிறுவன உத்தியோகத்தர்கள், மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தார்கள்
 
22worldvis