யாழ்ப்பாண மாவட்டச் செயலக மனிதவள வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மொபிட்டல் தொலைத்தொடர்பு நிறுவனத்தினால் மாற்றுத்திறனாளிகளுக்கான தொழிற்சந்தை நிகழ்வு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் 15.03.2022 காலை 9.30 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.
மாற்றுத் திறனாளிகளுக்கான தொழிற்சந்தை ஆரம்ப நிகழ்வில் பிரதம விருந்தினராக மாவட்ட அரசாங்க அதிபர் உயர்திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்கள் கலந்துகொண்டதோடு, "மாற்றுத்திறனாளிகளுக்கான தொழிற்சந்தையை மொபிட்டல் நிறுவனத்துடன் இணைந்து இன்றையதினம் மேற்கொள்கிறோம். கடந்த வருடமும் பல தொழிற்சந்தைகளை நடாத்தி தொழில் தேடுவோருக்கு வேலைவாய்ப்புக்களை பெற்றுக்கொடுத்துள்ளோம். அந்தவகையில் இத் தொழில்சந்தையை பயன்படுத்தி உங்கள் வருமானத்தை அதிகரித்துக் கொள்ளுதல் வேண்டும். உங்கள் தொடர்பாடல் திறனை விருத்திசெய்து தொழில் வழங்குநராகவும் மாறவேண்டும் இதனூடாக நீங்கள் சமூகத்தில் முன்னுதாரணமாக திகழமுடியும்" எனவும் குறிப்பிட்டார்.
இத் தொழில் சந்தையில் மனிதவள வேலைவாய்ப்புத் திணைக்கள இணைப்பாளர் திரு.க.கருணாகரன் மற்றும் மொபிட்டல் நிறுவன பிரதிநிதிகள், மனிதவள வேலைவாய்ப்புத் திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்






