யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியத்தின் ஏற்பாட்டில் புலம்பெயர் தொழிலாளர்களின் பிள்ளைகளிற்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு (30.03.2022 )மாவட்டச் செயலக கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் ஐந்தாம்தர புலமைப்பரிசில் பரீட்சை , க.பொ.த.சாதாரணதர பரீட்சை, க.பொ.த உயர்தர பரீட்சைகளில் சித்தியடைந்த புலம்பெயர் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.
மேலும், இந் நிகழ்வில் புலமைப்பரிசிலின் நோக்கம், மேற்குலக நாடுகளின் தொழில்வாய்ப்புக்கள் தொடர்பாகவும் மாணவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க(தலைவர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்), யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், , தறங்க ஹெட்டியாராச்சி( பிரதி பொதுமுகாமையாளர், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்), மங்கள ரந்தனிய ( மேலதிக பொதுமுகாமையாளர்,இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்), சஜித் சமிந்த(வடமாகாண சிரேஷ்டமுகாமையாளர்,இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்) மற்றும் சிரேஷ்ட முகாமையாளர்(யாழ்.மாவட்ட இலங்கை வங்கி), இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.






