யாழ்ப்பாண மாவட்ட விஷேட பொருளாதார மத்திய நிலையத்தின் குழுக் கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் இன்றையதினம் 08.04.2022 காலை பத்து மணிக்கு மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.இக் கலந்துரையாடலில், யாழ்ப்பாண மாவட்ட விஷேட பொருளாதார மத்திய நிலையத்தினை சிறந்தவகையில் செயற்படுத்தல் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன், அந் நிலையத்தின் விற்பனையாளர்களுடனும் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.
மேலும், யாழ்ப்பாண விஷேட பொருளாதார மத்திய நிலையத்தின் அடிப்படைவசதிகள், விளம்பரப்படுத்தல், விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடர்பாகவும் கலந்துரையாடல் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் இணையவழி நிகழ்நிலை ஊடாக கமத்தொழில் அமைச்சின் பணிப்பாளர் மற்றும் கமத்தொழில் இராஜாங்க அமைச்சின் இணைப்பாளர் ஆகியோரும் இணைந்துகொண்டதோடு, நேரடியாக மாவட்ட விவசாயப் பணிப்பாளர், சாவகச்சேரி பிரதேச செயலாளர், இலங்கை மின்சார சபையின் பிரதிநிதி, சாவகச்சேரி நகர சபை மற்றும் விற்பனையாளர்கள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்






