யாழ்ப்பாண மாவட்டத்தில் Fair Med நிறுவனத்தின் அனுசரணையில் "மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்தலைமைத்துவ குடும்பங்களை வலுப்படுத்துதல் தொடர்பான வைகறை நிகழ்ச்சித்திட்டத்தினை யாழ்.மாவட்டத்தில் ஆரம்பிப்பதற்கான ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் 19.04.2022 காலை ஒன்பது மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் பெண்தலைமைத்துவ குடும்பங்களை இனங்கண்டு வாழ்வாதாரத்தை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இத்திட்டத்தை ஆறு வருடங்களுக்கு யாழ். மாவட்டத்தில் செயற்படுத்தவுள்ளதோடு, இச் செயற்திட்டம் தொடர்பான கருத்துக்கள், ஆலோசனைகள், முன்மொழிவுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் திரு.ம.பிரதீபன், உதவி மாவட்டச் செயலாளர் திருமதி.எஸ். சி.என்.கமலராஐன், Fair med நிறுவன ஒருங்கிணைப்பாளர் வைத்தியர் நயானி சூரியாராச்சி, உதவிப் பிரதேச செயலாளர்கள், மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள், சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பெண்கள்அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தார்கள்






