தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமை மற்றும் அத்தியாவசிய பொருட்கள், சேவைகள் விநியோகம் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் 21.04.2022 பிற்பகல் 2.30 மணிக்கு யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் எரிபொருள் பாவனை, சிறுபோகத்திற்கான பசளையின் தேவைப்பாடு, சமூக அமைதியின்மை தொடர்பான அறிக்கையிடல், மாவட்டத்தின் உணவு தேவைப்பாடு போன்ற விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.
மேலும், இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), திட்டமிடல் பணிப்பாளர், பிரதம கணக்காளர், உதவி மாவட்டச் செயலாளர், மாவட்டச் செயலக பொறியியலாளர் மற்றும் பிரதேச செயலாளர்கள் நிகழ்நிலை (zoom) ஊடாகவும் கலந்து கொண்டிருந்தார்கள்






