புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் நிலைபேறான புண்ணிய கிராமம் நிகழ்ச்சித்திட்டத்தினை செயற்படுத்துதல் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் 18.05.2022 பிற்பகல் 3.30 மணிக்கு மாவட்டச்செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் குற்றங்கள் அதிகம் இடம்பெறுகின்ற இடங்களாக இலங்கை பொலீஸ் தலைமையகத்தினால் யாழ்ப்பாண மாவட்டத்தில் அடையாளப்படுத்தப்பட்ட கிராமங்களில் புண்ணிய கிராமத்தை திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கான கிராமத்தினை தெரிவு செய்தல், அடிப்படை பிரச்சினைகளை இனங்காணல், அடையாளப்படுத்தப்பட்ட குடும்பங்கள் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ளல், புண்ணிய கிராம செயற்பாட்டுக் குழுவை நியமித்தல் , கருத்திட்டங்களை பிரதேச செயலாளருக்கு சமர்ப்பித்தல், பிரதேச செயலாளர் மாவட்டச் செயலாளருக்கு சமர்ப்பித்தல் , நடைமுறைப்படுத்தப்படும் கால அட்டவணை என்பன தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.
மேலும், இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), உதவி மாவட்டச் செயலாளர், பிரதேச செயலாளர்கள், சமுர்த்திப் பணிப்பாளர், பொலிஸ் அத்தியட்சகர், துறைசார் திணைக்களத் தலைவர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தார்கள்






