இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் ஓய்வூதியத்திட்ட நடைமுறைப்படுத்தல் தொடர்பான மெச்சுரைகளையும், ஊக்குவிப்புக் கொடுப்பனவுகளையும் வழங்குதல் நிகழ்வானது அரசாங்க அதிபர் தலைமையில் (25) மாவட்டசெயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.
இந் நிகழ்வில் இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் ஓய்வூதியத்திட்ட நடைமுறைப்படுத்தலில் சிறப்பான அடைவு மட்டங்களை அடைந்த பிரதேச செயலகங்களிற்கான மெச்சுரைகளும், மற்றும் ஊக்குவிப்பு கொடுப்பனவுகளும் வழங்கப்பட்டது. குறிப்பாக ஓய்வூதியத்திட்ட நடைமுறைப்படுத்தலில் யாழ் மாவட்டமானது தேசிய ரீதியில் 1 ஆம் இடத்தினைப் பெற்றுக் கொண்டது. மேலும் தெல்லிப்பளை பிரதேச செயலகம் தேசிய ரீதியில் பணச்சேகரிப்பு, விகிதாசார அடிப்படை மற்றும் பயனாளிகள் எண்ணிக்கை அடிப்படையில் 1ஆம் இடத்தினையும், கரவெட்டி பிரதேச செயலகம் பணச்சேகரிப்பில் 2ஆம் இடத்தினையும் பயனாளிகள் எண்ணிக்கை அடிப்படையில் 3 ஆம் இடத்தினையும், சண்டிலிப்பாய் பிரதேச செயலகம் பணச்சேகரிப்பில் 3ஆம் இடத்தினையும், பயனாளிகள் எண்ணிக்கை அடிப்படையில் 2 ஆம் இடத்தினை பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர், மாவட்டச்செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேசசெயலர்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தார்கள்

 25soc1 25soc2 25soc3
 
25soc4 25soc5 25soc6