யாழ்ப்பாண மாவட்ட பனை அபிவிருத்தி தொடர்பான செயலமர்வு மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் 07.06.2022 காலை 09.30 மணிக்கு மாவட்டச்செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இச் செயலமர்வில் கருத்துதெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்கள் பனை அபிவிருத்தி நடவடிக்கைகளை ஊக்குவித்தல், அதன் விரிவாக்கல் நடவடிக்கைகள் மற்றும் பெறுமதிசேர் வளங்களை பயன்படுத்தி அத்துறையில் வருமானம் ஈட்டும் வழிகள் மற்றும் அவற்றிற்குரிய சந்தைவாய்ப்பு தொடர்பாக கருத்து தெரிவித்தார். மேலும், பனைசார் உற்பத்தி பொருட்களின் கேள்விக்கேற்ப நிரம்பல் போதாதுள்ளதாக சுட்டிக்காட்டியதோடு பனை சார் உற்பத்திகளை ஊக்குவிக்குமாறும் ஆலோசனை வழங்கப்பட்டது.
இச்செயலமர்வில் மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் பிரதேச பனைசார் அபிவிருத்தி தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்க வேண்டியுள்ளதாகவும் எமது பிரதேசத்தில் அபிவிருத்தி நடவடிக்கைகளின் பொருட்டு பனை வளங்கள் அழிக்கப்படுவதாகவும் இதனால் பனை உற்பத்தி சார் பொருட்கள் பார்வைக்குரிய காட்சிப்பொருளாக மாறி பனைசார் உற்பத்தி பொருட்களை பயன்படுத்தும் தன்மை நலிவடைந்து மக்கள் நவீனத்துவம் நோக்கி செல்வதாகவும் தெரிவித்தார்.எனவே பனைசார் உற்பத்திகளை ஊக்குவிக்கும் செயற்பாடுகளை துறைசார் தரப்பினர் இனங்கண்டு முன்னெடுக்குமாறும் ஆலோசனை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இச்செயலமர்வில் இலங்கை நிர்வாக சேவை உயரதிகாரி ( ஓய்வுபெற்ற) திரு.M.செல்வின் இறேனியஸ்,மேலதிக அரசாங்க அதிபர், மாவட்டச் செயலக திட்டமிடல் பணிப்பாளர், மாவட்டச் செயலக மற்றும் பிரதேச செயலக துறைசார் உத்தியோகத்தர்கள் , மற்றும் பனை அபிவிருத்தி சபை உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள்

7palmyrah