யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்திற்கு ஐக்கிய நாடுகள் சபையின் ஆசிய பசுபிக் பிராந்திய அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்கான பணிப்பாளர் டேவிட் மெக்லாக்லன் - ஹார் அவர்கள் (19.08.2022) விஜயம் செய்து மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களுடன் யாழ்.மாவட்ட தற்போதைய நிலமைகள் தொடர்பாக கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளார்.
இக் கலந்துரையாடலில் யாழ்.மாவட்டத்தின் தற்போதைய அபிவிருத்தி நிலமைகள், அத்தியாவசிய தேவைகள், வீடமைப்பு, குடிநீர் வசதிகள், வாழ்வாதார தேவைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. அத்தோடு எதிர்காலத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் செயற்திட்டங்களை முன்னெடுப்பதற்கான விஜயமாகவும் இது காணப்பட்டது.
மேலும், இக் கலந்துரையாடலில் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் வதிவிட பிரதிநிதி ஹெனா சிங்கர், மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) எஸ்.முரளிதரன், உதவி மாவட்டச் செயலாளர் எஸ்.சி.என் .கமலராஜன் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் ஆசிய பசுபிக் பிராந்திய அபிவிருத்தி ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.






