உலக உணவுத்திட்டத்தின் கீழ் குறைந்த வருமானமுள்ள குடும்பங்களுக்கான பண உதவி வழங்கும் திட்டம் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் (23.08.2022) காலை 10.00 மணிக்கு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் சாவகச்சேரி, ஊர்காவற்துறை பிரதேச செயலகங்கள் தெரிவு செய்யப்பட்டு அப்பிரதேசங்களில் பாலூட்டும் தாய்மார் , கர்ப்பிணித்தாய்மார் , விசேட தேவையுடையோர் , பெண்தலைமைத்துவ குடும்பங்கள், 5 அல்லது 4 உறுப்பினர்களுடைய சமுர்த்தி உதவி பெறும் குடும்பங்கள் என்னும் பாகுபாட்டின் அடிப்படையில் பண உதவி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இக்கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், உதவி திட்டமிடல் பணிப்பாளர்,பிரதி திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர், உலக உணவுத் திட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் துறை சார் உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.





