யாழ்ப்பாண மாவட்ட டெங்கு கட்டுப்பாட்டுக் குழுக்கூட்டம் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் 30.09.2022 காலை 11.00 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் யாழ்.மாவட்டத்தில் டெங்கு நுளம்பின் தாக்கம் அதிகரித்து காணப்படுகின்றமையினால் அதனைத் தடுப்பதற்கான முற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளல், மாவட்ட, பிரதேச ,கிராம மட்டங்களில் குழுக்களை நியமித்து கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளல், கழிவகற்றல் முகாமைத்துவத்தினை வினைத்திறனாக மேற்கொள்வதன் ஊடாக டெங்கை கடடுப்படுத்தல், பராமரிக்கப்படாத காணிகளில் பயிர்ச்செய்கை நடவடிக்கைளுக்கு உட்படுத்தல், பொது சுகாதார பரிசோதகர்கள் எதிர்நோக்கும் சவால்கள், டெங்கு கட்டுப்பாட்டு வாரத்தை பிரகடனப்படுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தல், டெங்கு கட்டுப்பாடு தொடர்பான முப்படையினரின் பங்களிப்பு, அதிகூடிய டெங்கு பரவும் இடங்களை தெரிவு செய்து நேரடிக்கண்காணிப்பில் கூட்டுப்பங்களிப்புடன் ஈடுபடுதல்,டெங்கு கட்டுப்பாடு தொடர்டபான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளல் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.
இக் கலந்துரையாடலில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் திரு.கேதீஸ்வரன், பிராந்திய தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் திரு.எஸ்.சிவகணேஸ் மற்றும் திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், சுகாதார வைத்திய அதிகாரிகள், பொது சுகாதார உத்தியோகத்தர்கள், தவிசாளர்கள் மற்றும் பிரதேச சபை செயலாளர்கள், முப்படையினர்கள், வலயக்கல்விப் பணிப்பாளர்கள், பிரதம பொறியியலாளர், மற்றும் துறை சார் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்





