நலன்புரி நன்மைகள் செலுத்துதல் தொடர்பில் தகுதியான நபர்களை கண்டறியும் செயற்திட்டம் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் 30.09.2022 பி.ப 12.30 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
அத்தோடு, நலன்புரி நன்மைகள் செலுத்துதல் தொடர்பில் தகுதியான நபர்களை கண்டறியும் செயற்திட்டம் தொடர்பில் மக்களுக்கான விண்ணப்பங்களை விண்ணப்பிப்பதற்கான விழிப்புணர்வூட்டல், பிரதேச மட்டங்களில் விண்ணப்பங்களை தரவுத்தளங்களில் பதிவு செய்தல், மக்களுக்கு நலன்புரி நன்மைகள் செலுத்துதல் தொடர்பான செய்தி சென்றடைந்தமையை உறுதிப்படுத்துதல், தகுதியான நபர்களை கண்டறியும் செயற்திட்டம் தொடர்பில் வினைத்திறனான தகவல்களை பெற்றுக்கொள்ளுதல் என்பன தொடர்பாக ஆராயப்பட்டன.
மேலும், இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்ட செயலாளர் மற்றும் பிரதேச செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்






