பால்நிலைக்கு எதிரான வன்முறை மற்றும் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் நேற்று (12.10.2022) காலை 9.30 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
ஆரோக்கியமான பால்நிலை, வன்முறையற்ற வேலைத்தளங்களை உருவாக்குதல் மற்றும் பால்நிலை தொடர்பான விழிப்புணர்வை அனைத்து ஊழியர்கள் மட்டத்திலும் ஏற்படுத்தல் தொடர்பாக இதன்போது தெளிவுபடுத்தப்பட்டது.ஆரோக்கியமான வேலைச்சூழலும் உளநல மேம்பாடும் தொடர்பாக உளவளத்துறை உத்தியோகத்தர் என்.உதயகுமார் கருத்துரை வழங்கினார்.
அத்துடன் வேலைத்தளங்களில் பால் மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறையற்ற ஆராக்கியமான வேலைச்சூழலை உருவாக்குதல் தொடர்பாகவும், பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் கி.தயாபரியினால் விளக்கமளிக்கப்பட்டது.

மேலும், இச் செயலமர்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், உதவி மாவட்ட செயலாளர் எஸ்.சி.என்.திருமதி.கமலராஜன், மாவட்ட பெண்கள் அபிவிருத்தி பிரிவு இணைப்பாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்

12gen1 12gen2