நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் நடமாடும் சேவை நிகழ்ச்சித்திட்டம் அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் நேற்று (31.10.2022)காலை 9 மணி தொடக்கம் 4 மணி வரை யாழ்.மாவட்ட செயலக வளாகத்தில் நடைபெற்றது.
இந் நடமாடும் சேவையில் இழப்பீடுகளுக்கான அலுவலகத்தினால் 2.3 மில்லியன் பெறுமதியான காசோலை வழங்கப்பட்டுள்ளது. இக் கொடுப்பனவு போரினால் பாதிக்கப்பட்டவர்கள் , இறப்பு மற்றும் காயம் அடைந்தவர்கள், சொத்திழப்படைந்த அரசாங்க ஊழியர்கள் ஆகியோர் உள்ளடங்கலாக 23 நபர்களுக்கு வழங்கிவைக்கப்பட்டன.
அத்துடன் இழப்பீடுகளுக்கான அலுவலகத்தின் சேவைகளை பெற்றுக்கொள்வதற்கு 55 பேர் வருகை தந்ததுடன் 37 பேர் தங்கள் கோவைகளைப் பூரணப்படுத்தி அடுத்த கட்ட இழப்பீடுகளுக்கான கொடுப்பனவு பெற்றுக்கொள்ள தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இந் நடமாடும் சேவையில் நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு கௌரவ அமைச்சர் கலாநிதி திரு.விஜயதாஷ ராஜபக்ஷ, அமைச்சின் செயலாளர் வசந்த பெரேரா, அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் குமாரி, இழப்பீடுகளுக்கான பணிப்பாளர் நாயகம் எஸ்.எல்.எம். ஹசீம் மற்றும் மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், துறை சார் அதிகாரிகள், நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் அதிகாரிகள், பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தார்கள்

31chemob1 31chemob2 31chemob3