முதியோர் பராமரிப்பு சேவை தொடர்பான பயிற்சி பட்டறை யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் 12.12.2022 மு.ப 9 .00 - பி.ப .4.00 மணி வரை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது
முதியோா் தேசிய செயலகமானது முதியோா் சமுதாயத்தினரின் நலன்புரி தொடர்பில் அனேக திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது .அந்த வகையில் மேற்படி பயிற்சி பட்டறையும் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளதோடு யாழ்ப்பாண மாவட்டத்திலும் நடைமுறைப் படுத்தப்பட்டு மேற்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்வில் மனித வளர்ச்சி பருவங்கள், முதுமை பருவ செயலன்முறை, உடலியல் உதவி மற்றும் அடிப்படைத் தாதியர் திறன்கள் , படுக்கையில் இருக்கும் வயதானவர்களுக்கு தாதிய உதவி, நடைமுறை பயிற்சிகள், சிகிச்சை மற்றும் பராமரிப்பு முகாமைத்தும், செயலுக்கமான முதுமை பருவத்திற்கான உடற்பயிற்சி, முதியோர்கள் மற்றும் அவர்களுக்கான உளவளத் துணைத் திறன்களை விருத்தி செய்தல் ,முதியோர் துஷ்பிரயோகம் தொடர்பாக வளவாளர்களால் கருத்துரைகளும் பயிற்சிகளும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் உதவி மாவட்ட செயலாளர் எஸ்.சி.என்.கமலராஜன் , பல்கலைக்கழக தாதியற்துறை இணைந்த சுகாதார விஞ்ஞானபீட சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி கமலராஜன் லஷ்மி,யாழ் பல்கலைக்கழக தாதியற்துறை இணைந்த சுகாதார விஞ்ஞான பீட சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி.தெய்வி.தபோதரன்,உளவளத் துணை முதியோர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் ,முதியோர் தேசிய செயலக உத்தியோகத்தர்கள்,மாவட்ட விளையாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தா் , மாவட்ட செயலக முதியோர் உரிமை உத்தியோகத்தர் ,பிரதேச செயலக முதியோர் உரிமை மேம்பாட்டுஉத்தியோகத்தர்கள், முதியோர் இல்லங்களில் கடமை ஆற்றும் பராமரிப்பாளர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்

12eld1 12eld2 12eld3