யாழ்ப்பாண மாவட்ட செயலக நலன்புரிக் கழகத்தின் ஏற்பாட்டில் தேசிய உற்பத்தித்திறன் போட்டியில் யாழ்ப்பாண மாவட்ட செயலகம் முதலாம் இடத்தை பெற்றுக் கொண்டமைக்கான கௌரவிப்புவிழா யாழ் மாவட்ட செயலக கணக்காளரும் நலன்புரிக் கழகத்தின் தலைவருமான திரு. அ. நிர்மல் அவர்களின் தலைமையில் இன்று 21.12.2022 காலை 11.00 மணிக்கு யாழ் மாவட்ட செயலக கேட்போா் கூடத்தில் நடைபெற்றது.
இதன்போது கருத்து தெரிவித்த யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் அர்ப்பணிப்பான வினைத்திறன் மற்றும் விளைதிறனான செயற்பாட்டாலும், மக்களுக்கு வழங்கிய உன்னதமான சேவையினாலும் இந்த வெற்றி கிடைக்கப்பெற்றதாக குறிப்பிட்டார்.
இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் , மேலதிக அரசாங்க அதிபர் (காணி), பதவி நிலை உத்தியோகத்தர்கள் , யாழ்ப்பாண மாவட்ட செயலக உற்பத்தித்திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்






