2022 ஆம் ஆண்டின் இறுதிக் காலாண்டுக்குரிய யாழ் மாவட்ட சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் 23.12.2022 காலை யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் பிரதேச மட்டத்தில் தீர்க்கப்பட முடியாத சிறுவர் தொடர்பான பிரச்சினைகள் தொடர்பாக கலந்து ஆலோசிக்கப்பட்டதுடன் போதைப்பொருள் பாவனை விழிப்புணர்வு, கட்டாய கல்வி குழுக்களை நியமித்து மீள்உருவாக்கல், தனியார் கல்வி நிலையங்களை ஒழுங்குபடுத்தல் மற்றும் மேற்பாா்வை செய்தல், பிறப்பு பதிவேற்ற பிள்ளைகளுக்கான சிறப்பு பிறப்பு பதிவுகள் மேற்கொள்ளல்,முன்பிள்ளை பருவ அபிவிருத்தி, அரச சார்பற்ற நிறுவனங்களின் சிறுவர் தொடர்பான செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன

இக்கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் ,உதவி மாவட்ட செயலாளர் ,திட்டமிடல் பணிப்பாளர் சமுர்த்திப் பணிப்பாளர் ,பிரதேச செயலாளர்கள்,உதவிப் பிரதேச செயலாளர்கள், மாகாண நன்னடத்தை ஆணையாளர், சட்ட வைத்திய அதிகாரி, சுகாதாரத் திணைக்கள அதிகாரிகள், கல்வித்திணைக்கள அதிகாரிகள், பிரதேசமட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் ,மாவட்ட செயலக சிறுவர் அபிவிருத்தி இணைப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்

23meeting