இலங்கையின் 75 வது சுதந்திர தின நிகழ்வு தொடர்பான ஆரம்பகட்ட கலந்துரையாடல் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் (28.12.2022) காலை 10.00 மணிக்கு யாழ்மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
மாண்புமிகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் பங்குபற்றலுடன் இலங்கையின் 75 வது சுதந்திர தின தேசிய நிகழ்வை ஒட்டிய நிகழ்வுகளை இம் முறை யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்ட இந்திய கலாசார மண்டபத்தில் ஜனவரி மாதம் 11ம் திகதி நடாத்தப்படுவதற்கான முன்னேற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.

குறித்த கூட்டத்தில் கௌரவ வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் புத்தசாசன மத விவகார கலாச்சார அமைச்சின் பணிப்பாளர் ஆகியோர் சூம் தொழில்நுட்பம் ஊடாக கலந்து கொண்டதுடன்,ஜனாதிபதி செயலகத்தின் மேலதிக செயலாளர், யாழ் இந்திய துணைத் தூதுவர், யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்( காணி),யாழ் மாநகரசபை ஆணையாளர், உதவி மாவட்ட செயலாளர், பிரதி பொலிஸ்மா அதிபரின் பிரதிநிதி மற்றும் , பிரதேச செயலாளர்கள் ,வடக்கு மாகாணசபை துறைசார் அதிகாரிகள்,வடமாகாண கல்வி அமைச்சின் அதிகாரிகள்,வங்கி பிரதி நிதிகள், மற்றும் துறைசாா் மாவட்டச்செயலக உத்தியோகத்தர்கள் குறித்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

28ind1 28ind2 28ind3