fairmed நிறுவனத்தின் நிதி அனுசரணையில் சமூக சேவை உத்தியோகத்தர்கள் சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் முதியோர் மேம்பாட்டு உத்தியோகத்தர்களுக்கான வலுவூட்டல் திறன் விருத்தி மூன்று நாள் பயிற்சி நெறியின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் 29.12.2022 பி.ப 12.30 மணிக்கு யாழ் மாவட்ட செயலக கேட்போா் கூடத்தில் நடைபெற்றது
பிரதேச மட்டத்தில் அங்கவீனமுற்ற நபர்களுக்காக சேவை புரியும் இவர்கள் கல்வி மற்றும் மனப்பாங்குடன் செயற்படுகின்றார்கள் இத்தகைய உத்தியோகத்தர்ளின் வலுவூட்டல் திறன் விருத்தியை மேம்படுத்தும் நோக்கில் இவ்வாறான பயிற்சி நெறிகள் அவசியமாக உள்ளது அந்த வகையில் இப்பயிற்சி நெறியில் பங்குபற்றியவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் முகமாக இந்நிகழ்வு நடாத்தப்பட்டது.

இப்பயிற்சி நெறியில் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் , fairmed நிறுவன இணைப்பாளர் வை.சுமங்கலை , வளவாளர் ஆர். கலைவேந்தன், சமூக சேவைகள் திணைக்களத்தின் கீழ் கடமையாற்றும் சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், முதியோர் மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், சமூக சேவைகள் உத்தியோகத்தர்கள் மாவட்ட செயலக சமூக சேவைகள் உத்தியோகத்தர் ஆகியோா் கலந்து கொண்டனர்.