யாழ் மாவட்டத்தில் காணப்படும் உள்ளூர் உற்பத்தி பொருட்களை சுற்றுலா நோக்கில் சந்தைப்படுத்துதல் தொடர்பான கலந்துரையாடல் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் 29.12.2022 பி.ப 1.00 மணிக்கு யாழ் மாவட்ட செயலக மாநாட்டு மண்டத்தில் நடைபெற்றது
சுற்றுலா நோக்கில் உள்ளூர் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்துவதை மேம்படுத்தும் நோக்கில் உள்ளூர் உற்பத்தி பொருட்கள் சார்ந்த சுற்றுலா கையேடுகளை தயாரித்தல் அது தொடர்பான காணொளிகளை தயாரித்து வெளியிடுதல்,முக்கியமான இடங்கள் மற்றும் சுற்றுலா மையங்களில் உள்ளூர் உற்பத்தி பொருட்களுக்கான சந்தைப்படுத்தல் காட்சி கூடங்களை நிறுவுதல் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.
இதில், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளராக பதவியுயர்வு பெற்றுச் செல்வதை முன்னிட்டு உள்ளூர் உற்பத்தி முயற்சியாளர்களால் மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களுக்கு நினைவுப்பரிசில் வழங்கிவைக்கப்பட்டது.

 இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர்,கைத்தொழில் அபிவிருத்தி சபையின் பிரதிநிதி, சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் உதவி பணிப்பாளர்,வடமாகாண சுற்றுலாப் பணியகத்தின் சுற்றுலா மேம்பாட்டு உத்தியோகத்தர் , கைத்தொழில் துறை மாவட்ட அலுவலர் மற்றும் சுற்றுலாசார் அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்

29meet1 29meet2 29meet3