தொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்தல் தொடர்பாக கௌரவ அமைச்சருடனான கலந்துரையாடல் யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்று (04.01.2023) காலை 10:30 மணிக்கு யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
யாழ் மாவட்டத்தில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் கீழ் நடைபெறவுள்ள ( Glocal Fair - 2023) "வடக்கின் ஒளிமயம்" நிகழ்ச்சித்திட்டம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் யாழ் மாவட்டத்தில் நடைபெறவுள்ளது.இதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளும் நோக்கில் இக் கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக யாழ் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றிருக்கும் இளைஞர் யுவதிகளுக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும் நோக்கில் ஆலோசனைகளையும் விழிப்புணர்வுகளையும் வழங்குவதற்காகவும், தொழில் தொடர்பான பிரச்சினைகள், EPF மற்றும் ETF பிரச்சினைகள் தொடர்பாக தீர்வுகாணும் நோக்கில் இந்த நிகழ்ச்சி திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இக் கலந்துரையாடலில் அமைச்சின் மேலதிக செயலாளர் திரு.ப.செந்தில்நந்தனன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு.எஸ்.முரளிதரன் மற்றும் தொழில் மற்றும் வேலைவாய்ப்பு ஆணையாளர், யாழ்ப்பாண பிரதேச செயலாளர், யாழ். பிராந்திய மின் பொறியியலாளர்,மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

4fb1 4fb2 4fb3

4fb4 4fb5