உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான முன்னேற்பாட்டு கலந்துரையாடல் யாழ் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் (12.01.2023) பிற்பகல் 2.30 மணிக்கு யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு அதற்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதையடுத்து இதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் தொடர்பாக பொலிஸ் உத்தியோகத்தர்களுடனான முன்னேற்பாட்டுக் கலந்துரையாடலாக இது அமைந்தது.
இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர் இ.சி.அமல்ராஜ் , சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர், பிரதிப் பொலிஸ் மா அதிபர், உதவி பொலிஸ் மா அதிபர், மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.






