தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஐயாயிரம் ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் யாழ் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் ம.பிரதீபன் தலைமையில் 110 வறிய குடும்பங்களுக்கு யாழ் மாவட்ட செயலகத்தில் (12.01.2023) வழங்கிவைக்கப்பட்டது.நிர்த்தனகுமாரன் ராஜி குடும்பத்தினர் மற்றும் திருமதி ஹெலன் தேவராஜன் ஆகியோரின் நிதி உதவியில் இந்த உலர் உணவுப்பொதிகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது உதவி மாவட்ட செயலாளர், சிறுவர் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்






