பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதி நடைபெறவுள்ள 75 ஆவது தேசிய சுதந்திர தின விழா தொடர்பான முன்னேற்பாட்டு கலந்துரையாடல் யாழ் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் (17.01.2023) காலை 10.00 மணிக்கு யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
குறிப்பாக கலாச்சார ரீதியிலான ஆரம்ப வரவேற்பு நிகழ்வுகள், வரவேற்பு நிகழ்விற்கான ஆரம்ப ஒத்திகை ஏற்பாடுகள்,வீதி ஒழுங்கமைப்பு, சாரணர் அணிவகுப்பு, மற்றும் தொடர்புடைய இதர விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டன.
இக் கலந்துரையாடலில் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி), 51 ஆவது படைப்பிரிவு இராணுவ கட்டளைத் தளபதி, மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், துறை சார் உத்தியோகத்தர்கள், பரியோவான் கல்லூரி மாணவர்களுக்கான பொறுப்பதிகாரி, சாரணர் பொறுப்பதிகாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்






