யாழ்ப்பாண மாவட்ட சாரணர் கிளைச் சங்கத்தின் தலைவராக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்கள் கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்கும் நிகழ்வு யாழ் மாவட்டத்தின் மேலதிக அரசாங்க அதிபரும் யாழ்ப்பாண சாரணர் சங்கத்தின் மாவட்ட ஆணையாளருமான மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் (06.02.2023) காலை 9.30 மணிக்கு மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
யாழ் மாவட்ட சாரணர் கிளைச் சங்கத்தின் தலைவராக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்கள் கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிகழ்வில் உதவி மாவட்ட செயலாளர் எஸ்.சி.என்.கமலராஜன் ,மாவட்ட சாரணர் சங்கத்தின் உதவி மாவட்ட ஆணையாளர் திரு க.துற்ஜெயந்தன் (நிர்வாகம்), உதவி மாவட்ட ஆணையாளர் திரு கோ.சத்தியன் (நிகழ்ச்சி) , உதவி மாவட்ட ஆணையாளர் திரு இ.ரஜீவன் (பயிற்சி), உதவி மாவட்ட ஆணையாளர் திரு.ம.ஞானசம்மந்தன்,உதவி மாவட்ட ஆணையாளர் திருமதி E.I.தேவமித்திரன் மற்றும், மாவட்ட சாரண ஆசிரியர்கள் திரு ந.லிங்கேஸ்வரன், திருமதி ச. வேஜின் மற்றும் யாழ் இந்து ஆரம்பப் பாடசாலை அதிபர் திரு.பே.தனபாலசிங்கம், கொக்குவில் இந்துக் ஆரம்பப் பாடசாலை அதிபர் திருமதி கவின்ஜா நவஜீவா மற்றும் மாவட்ட செயலக இணைப்பாளர் P.கஸ்ரோ ஆகியோர் கலந்து கொண்டனர்






