முதலாம் காலாண்டு கணக்காய்வு முகாமைத்துவ குழு கூட்டம் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களின் தலைமையில் (16) காலை 9.00 மணிக்கு யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக் கணக்காய்வு முகாமைத்துவ கூட்டத்தில் மாவட்ட பிரதேச செயலகங்களில் கடந்த ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட மற்றும் நிறைவேற்றப்படாத திட்டங்கள் தொடர்பாகவும் அவ்வாறான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயப்பட்டதுடன் உள்ளக கணக்காய்வில் எதிர்நோக்கிய பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.
இக் கலந்துரையாடலில் மாவட்ட செயலக அதிகாரிகள் உட்பட சிரேஸ்ட உதவி கணக்காய்வாளர் நாயகம் பி.பற்குணன் அவர்களுடன் zoom தொழில்நுட்பத்தின் ஊடாக பிரதேச செயலாளர்களும் கலந்து கொண்டனர்.






