மனித வலு வேலைவாய்ப்பு திணைக்களத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களுக்கான 2022 ஆம் ஆண்டுக்குரிய முன்னேற்ற அறிக்கை கூட்டம் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களின் தலைமையில் 27.02.2023 அன்று காலை 9.00 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
எமது இளைஞர் யுவதிகளுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றுக் கொள்வதற்கான ஊக்கப்படுத்தல்களை வழங்க வேண்டும் என்றும் அதற்கு Iom நிறுவனத்துடன் இணைந்து மொழிப்பயிற்சிகளை மேற்கொண்டு ஊக்கப்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும் எனவும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கருத்து தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில் மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களப் பணிப்பாளர் நாயகம் திருமதி அனுசா கோகுல பெர்னாண்டோ,யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன்,மேலதிக பணிப்பாளர் யு.டீ.ஆ. அஸ்ரப், யாழ்ப்பாணம், கிளிநொச்சி மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்கள உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்