யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் மாவட்ட மகளிர் சம்மேளனமும் இணைந்து நடாத்திய சர்வதேச மகளிர் தினம் - 2023 மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களின் தலைமையில் 16.03.2023 அன்று வியாழக்கிழமை காலை 9.00 மணிக்கு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாவட்ட செயலக பெண்கள் அபிவிருத்திப் பிரிவின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண மாவட்ட பெண் தொழில் முயற்சியாளர்களது உற்பத்திப் பொருட்களின் கண்காட்சியும் விற்பனையும் காலை 9.00 மணி தொடக்கம் மாலை 4.00 மணி வரை நடைபெற்றதுடன், சிறந்த பெண்தொழில் முயற்சியாளர்களுக்கான விருதுகள் 21 பெண்மணிகளுக்கும், சிறந்த பெண் குருதிக்கொடையாளர் விருது ஒரு பெண்மணிக்கும் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மருத்துவ பீட உயிர் இரசாயனவியல் சிரேஷ்ட பேராசிரியரும், பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உறுப்பினருமான பேராசிரியர் வசந்தி அரசரத்தினம் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

மேலும் இந்நிகழ்வில் மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் உட்பட மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் பிரதேச செயலகப் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், உளவளத்துணையாளர், மகளிர் சங்க அங்கத்தவர்கள் மற்றும் பெண் தொழில் முயற்சியாளர்களும் கலந்து கொண்டனர்

16wday1 16wday2 16wday3

16wday4 16wday5