யாழ்ப்பாண மாவட்டத்தில் சிறுவர் பாதுகாப்பு தொடர்பாக மதகுருமார்களுக்கான  விழிப்புணர்வு வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களின் தலைமையில் 15.06.2023 அன்று மாவட்ட செயலக கேட்டோர் கூடத்தில் நடைபெற்றது.
இதில், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் நோக்கத்தை தெளிவுபடுத்தல், சிறுவர் துஸ்பிரயோகம் மற்றும் அதனுடன் தொடர்புடைய சகலவிதமான துஸ்பிரயோகத்தில் இருந்தும் பிள்ளைகளை பாதுகாத்தல், மதநிலையங்களில் சிறுவர்களின் பாதுகாப்பிற்காக மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.
இக் கலந்துரையாடலில் உதவி மாவட்ட செயலாளர் எஸ்.சி.என். கமலராஜன், ஆர்.ராஜன் (வட மாகாண சிறுவர் நன்னடத்தை திணைக்களம்) மற்றும் மாவட்ட உள சமூக உத்தியோகத்தர், மும் மதகுருமார்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தார்கள்

 15childpro1 15childpro2 15childpro3 15childpro4