மாகாண மற்றும் மாவட்ட மட்டத்தில் இடம்பெற்ற கலாசார நல்லிணக்க ரீதியான மக்கள் மயப்படுத்தல் நோக்கில் திரைப்பட ஒளிபரப்பு செய்தலின் முதலாவது நிகழ்ச்சித்திட்டம் மேல்மாகாண மட்டத்தில் 26.05.2023 அன்று நீதியமைச்சர் கௌரவ விஜயதாச ராஜபக்ஸ தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்சித்திட்டத்தின் இரண்டாம் கட்ட நிகழ்வு 15.06.2023 வியாழக்கிழமை நீதியமைச்சர் கௌரவ விஜயதாச ராஜபக்ஸ தலைமையில் Zoom செயலி ஊடாக யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் ஒளிபரப்பானது.
இதில், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவணர் சிவபாலசுந்தரன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் சுரேந்திரநாதன் அவர்களும், மாவட்ட மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

 15culture1 15culture2 15culture3