யாழ்ப்பாண மாவட்ட செயலக இரண்டாம் காலாண்டு கணக்காய்வு முகாமைத்துவ குழு கூட்டம் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களின் தலைமையில் (22.06.2023) பிற்பகல் இரண்டு மணிக்கு மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இக் கணக்காய்வு முகாமைத்துவ கூட்டத்தில் மாவட்ட பிரதேச செயலகங்களில் கடந்த ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட மற்றும் நிறைவேற்றப்படாத திட்டங்கள் தொடர்பாகவும் அவ்வாறான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டன.
இக் கலந்துரையாடலில் பணிப்பாளர் சுனில் ஜே. ஜெயசேகர (உள்ளக கணக்காய்வு முகாமைத்துவம்), சிரேஷ்ட உதவிகணக்காய்வாளர் நாயகம்பி.பற்குணன், பதில் உதவி கணக்காய்வாளர் நாயகம் கே.சுகந்தராஜ் மற்றும் மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் , பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள்.







