யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் மேலதிக மாவட்ட செயலாளராக (காணி) கடமையாற்றி கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் மேலதிக மாவட்ட செயலாளராக இடமாற்றம் பெற்றுச் செல்லும் சுப்பிரமணியம் முரளிதரன் அவர்களுக்கான பிரிவுபசார நிகழ்வும், கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் மேலதிக மாவட்ட செயலாளராக பணியாற்றி யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் மேலதிக மாவட்ட செயலாளராக (காணி) இடமாற்றம்பெற்று கடமைகளைப் பொறுப்பேற்ற கனகராஜா ஸ்ரீமோகனன் அவர்களுக்கான வரவேற்பு நிகழ்வும் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தலைமையில் (10.07.2023 ) காலை 9.00 மணிக்கு கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
சுப்பிரமணியம் முரளிதரன் அவர்கள் இலங்கை நிர்வாக சேவையில் பயிற்சியை (SLIDA) 02.09.2003-31.08.2004 வரை மேற்கொண்டதுடன் 01.09.2004 – 08.01-2012 வரை தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளராகக் கடமையாற்றியதுடன் 09.01.2012 - 10.05.2015 வரை சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளராகவும் கடமையாற்றினார். அத்துடன் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் மேலதிக மாவட்ட செயலாளராக (காணி) 11.05.2015 -07.07.2023 வரை எட்டு வருடங்களாக தனது சேவையை மக்களுக்கு மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக அரசாங்க அதிபர் (காணி) கனகராஜா ஸ்ரீமோகனன் ஊர்காவற்றுறை, காரைநகர், தெல்லிப்பளை மற்றும் கரவெட்டி ஆகிய பிரதேச செயலகங்களில் பிரதேச செயலாளராகவும் வடமாகாண கைத்தொழில் திணைக்களத்தில் மாகாண பணிப்பாளராவும் கிளிநொச்சியில் மேலதிக அரசாங்க அதிபராகவும் பல்வேறு பதவிகளை அலங்கரித்து தற்போது யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு மேலதிக மாவட்ட செயலாளராக (காணி) உத்தியோக பூர்வமாக கடமையேற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், திட்டமிடல் பணிப்பாளர், பிரதமகணக்காளர், உதவி மாவட்ட செயலாளர் உட்பட பதவிநிலை உத்தியோகத்தர்கள் , பிரதேசசெயலாளர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்






