யாழ்ப்பாண மாவட்ட விவசாய அபிவிருத்திக்குழு விசேட கலந்துரையாடல் விவசாய அமைச்சர் கெளரவ மஹிந்த அமரவீர அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களின் தலைமையில் நேற்றைய தினம் (15.10.2023) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இக் கலந்துரையாடலில் கௌரவ வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வட மாகாண பிரதமசெயலாளர் சமன் பந்துலசேன, அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் மற்றும் மாகாண விவசாய அமைச்சின் செயலாளர், மாகாண விவசாய பணிப்பாளர், மாகாண நீர்பாசன பணிப்பாளர், மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர்(காணி), பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், கௌரவ கடற்தொழில் அமைச்சரின் இணைப்பாளர், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், கமக்கார அமைப்புக்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தார்கள்.
இதில், மாவட்ட விவசாய அபிவிருத்தி தொடர்பான விடயங்கள், விவசாய அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற அபிவிருத்தி திட்டங்கள், கமநல அபிவிருத்தி திணைக்களம் சார்ந்த அபிவிருத்தி திட்டங்கள், மாகாண விவசாயத்திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி திட்டங்கள், நீர்ப்பாசனத் திணைக்களத்தின் விவசாயம் சார்ந்த அபிவிருத்தி நடவடிக்கைகள், கால்நடை சுகாதார திணைக்களத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் உள்ளிட்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
மேலும் நெல் அழிவுக்கான காப்புறுதிக் கொடுப்பனவு மற்றும் விவசாயிகளுக்கான ஓய்வூதிய கொடுப்பனவு ஆகியனவும் வழங்கிவைக்கப்பட்டன.






