மகளிர், சிறுவர் அபிவிருத்தி மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சின் தேசிய பெண்கள் குழுவின் அனுசரணையுடன் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் பெண்களை அரசியல் ரீதியாக வலுவூட்டுவதற்கான இரு நாள் தலைமைத்துவ பயிற்சித் திட்டம் யாழ் மாவட்ட முகாமைத்துவ திறன் அபிவிருத்தி பயிற்சி நிலையத்தில் 25.10.2023 - 26.10.2023 ஆகிய திகதிகளில் காலை 9.00 மணி முதல் பி.ப 4.15 வரை நடைபெற்றது.
இப்பயிற்சி திட்டத்தின் முதல் நாள் நிகழ்வில் பெண்களுக்கான அரசியல் பிரவேசத்தின் சவால்களை அடையாளப்படுத்துதல், பெண்களின் அரசியல் பிரவேசத்தின் வரலாறு, இலங்கை அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம், தலைமைத்துவம், தலைமைத்துவத்தின் முக்கியத்துவம் செயல்முறை விளக்கம், மகளிர் சங்கங்களின் கருத்துக்கள் செயற்பாடுகள் தொடர்பாகவும் இரண்டாம் நாள் நிகழ்வில் தலைமைத்துவத்தில் உள்ள தடைகள், மகளிர் சங்கங்களுக்கான பெண் தலைவர்களின் பங்களிப்புகள், தலைமைத்துவத்தின் ஊடாக மகளிர் சங்க அங்கத்தவர்களில் நடத்தை மாற்றத்தை ஏற்படுத்துதல், உள்ளூராட்சி சபைகளில் பெண்களின் பிரதிநிதித்துவமும் பெண்களின் நிலைகளும், அரசியலில் பெண்கள் பிரவேசத்தின் நன்மைகள், பெண் அரசியல் தலைவர்களின் அனுபவப்பகிர்வுகள் தொடர்பாகவும் வளவாளர்களால் கருத்துரைகள் வழங்கப்பட்டன.
யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன், மேலதிக அரசாங்க அதிபர் ம. பிரதீபன் ஆகியோர் கலந்துகொண்டு இந் நிகழ்வை ஆரம்பித்துவைத்தார்கள்.
இதில் வளவாளர்களாக பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர் திரு.பொன்.பாலசுந்தரம்பிள்ளை, யாழ் பல்கலைக்கழக மனிதவள முகாமைத்துவத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி.சி. தேவரஞ்சினி, மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் திரு.ஆர்.சி.அமல்ராஜ், திறன் அபிவிருத்தி மாவட்ட இணைப்பாளர் திரு.ரி.நீலாம்பரன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.
மேலும்,மாவட்ட பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.கி.தயாபரி மற்றும் பங்குபற்றுநர்களாக மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் அரசியல் தளத்தினுள் பிரவேசித்துள்ள பெண்கள் மற்றும் மகளிர் விவகாரக் குழுக்களைச் சேர்ந்த அங்கத்தவர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
 
ladies leadership 01 ladies leadership 02