யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச்சபையும்  JICA உடன் இணைந்து யாழ் மாவட்டத்தில் தன்னார்வ பயிற்சியாளர்களுக்கான திறன் மேம்பாட்டு திட்டம்.

NDDCB இன் அவுட்ரீச் பிரிவு ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகாமையுடன் (JICA) இணைந்து யாழ்ப்பாண மாவட்டத்தில் போதைப்பொருள் தடுப்பு மற்றும் சிகிச்சையில் ஈடுபடும் தன்னார்வ பயிற்சியாளர்களுக்கான திறன் மேம்பாட்டு நிகழ்ச்சி நவம்பர் 07 ஆம் தேதி யாழ்ப்பாணம் கிரீன் கிராஸ் தனியார்விடுதியில்  நடைபெற்றது.

இப் பயிற்சித் திட்டத்தில் சுமார் 100 பயிற்சியாளர்கள் கலந்து கொண்டதுடன்  இப் பயிற்சியின் முக்கிய நோக்கம்  சமூக மட்டத்தில் போதைப்பொருள் தடுப்புத் திட்டங்களை மேலும் விரிவுபடுத்துவதாகும்.

இதில்,யாழ் மாவட்டத்தில் தன்னார்வ தடுப்பு, கல்வி,  சிகிச்சை விடயங்களில் செயற்பட்டு வருகின்ற யாழ் மாவட்ட தொண்டர்குழுவின்   மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் துறைசார்ந்த  உத்தியோகத்தர்களிற்கும் தேசிய அபாயகர  ஔடதங்கள் கட்டுப்பட்டுசபையின் பணிப்பாளர் நாயகம் அவர்களினால் சேவையை பாராட்டி நன்றி தெரிவிக்கப்பட்டது.

இந் நிகழ்வில்  மாவட்ட செயலாளர் அ.சிவபாலசுந்தரன், மாவட்ட மேலதிக செயலாளர் ம.பிரதீபன், JICA நிறுவன சிரேஷ்ட பிரதிநிதி நாமல் ரலபனாவே மற்றும்  உதவி மாவட்ட செயலாளர், வடமாகாணசபை உதவி பிரதம செயலாளர் , அரசாங்க அதிகாரிகள், சுகாதார நிபுணர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், மதத் தலைவர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் ஆலோசகர்கள் ஆகியோா் பயிற்சியில் கலந்துகொண்டனர்.

JICA 01  JICA 02 

 

JICA 03  JICA 04 

 

JICA 05  JICA 06