பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுடன் இணைந்து மனித உரிமைகள் கற்கைகளுக்கான நிலையத்தினால் யாழ் மாவட்ட பிரதேச செயலாளர்களுக்கான 'மனித உரிமைகள் அணுகுமுறையின் அடிப்படையில் தீர்மானமெடுத்தல்' தொடர்பிலான பயிற்சி செயலமர்வு 14.11.2023 ஆம் திகதி யாழ் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

நீதிக்கு ஆதரவளித்தலுக்கான இச் செயற்திட்டமானது, நீதித்துறைக்கான செயற்திட்டத்திற்கு அனுசரணையளிக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தினால் அனுசரணையளிக்கப்படுவதுடன், UNDP மற்றும் UNICEF ஆகியன இணைந்து அமுல்படுத்துகின்றன. இப் பயிற்சி செயலமர்வானது பேராசிரியர் திரு.என்.செல்வக்குமாரன் மற்றும் சட்டத்தரணி திரு.திருநாவுக்கரசு மாரிமுத்து ஆகியோரால் தமிழ் மொழியில் முன்னெடுக்கப்பட்டன.

யாழ் மாவட்ட செயலாளர் திரு. அம்பலவாணர் சிவபாலசுந்தரன், மேலதிக அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன், மற்றும் கொழும்பு பல்கலைக்கழக சட்டபீடத்தின் மனித உரிமை கற்கைகளுக்கான நிலையத்தின் செயற்திட்ட முகாமையாளர் திருமதி.சத்துரி ஜயவர்தன ஆகியோரும் இச் செயலமர்வில் கலந்துகொண்டிருந்தார்கள்.

இச்செயலமர்வில் அனைத்து பிரதேச செயலாளர்களுக்கும் அரச உத்தியோகத்தர்கள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான அவசியப்பாடு தொடர்பிலும் வலியுறுத்தப்பட்டன.

human rights01 human rights 02