யாழ் மாவட்ட செயலகத்தின் 2024ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பித்தல் நிகழ்வு "வலுவான எதிர்காலத்திற்கான தொடக்கவுரை" எனும் தொனிப்பொருளில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களின் தலைமையில் நேற்றைய தினம் (2024.01.01) காலை 9.00 மணிக்கு மாவட்ட செயலகம் முன்றலில் நடைபெற்றது.
2024 ஆம் ஆண்டுக்கான யாழ் மாவட்ட செயலகத்தினுடைய ஆரம்ப நிகழ்வானது தேசிய கொடி ஏற்றல், தேசிய கீதம் இசைத்தல் மற்றும் சத்தியப்பிரமாணம் செய்தல் போன்ற நிகழ்வுகளுடன் இனிதே ஆரம்பமானது. இந் நிகழ்வில் வரவில் சிறந்த உத்தியோகத்தர்களுக்கான சான்றிதழ்களும் அரசாங்க அதிபர் வெற்றிக் கிண்ண விளையாட்டுப்போட்டியில் பங்குபற்றிய உத்தியோகத்தர்களுக்கான மெச்சுரைகளும் வழங்கிவைக்கப்பட்டன.
அத்துடன் நிகழ்வில் பதவிநிலை உத்தியோகத்தர்களால் வாழ்த்துரைகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்





