மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சின் இலங்கை சமூக பாதுகாப்பு சபையினால் லயன்ஸ் கழகத்தின் அனுசரணையில் மாணவர்கள் மற்றும் உத்தியோகத்தர்களிற்கான கௌரவிப்பு நிகழ்வு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் ( 27.02.2024 )காலை 10.30 மணிக்கு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கடற்தொழில் அமைச்சரும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கலந்துகொண்டு மாணவர்களுக்கான புலமைப்பரிசில்களை வழங்கியிருந்தார்.

மேலும் சிறப்பு விருந்தினராக வட மாகாண கல்வியமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் திரு.நடராஜா திருலிங்கநாதன் அவர்களும் கௌரவ விருந்தினர்களாக லயன்.சி. பூபதிஅம்மாள் ( மாவட்ட அரிமாக்கழகம்), லயன்.எல்.சி.ஜெயசீலன்( தலைவர், நல்லூர் வடக்கு அரிமாக்கழகம் ), லயன்.அலெக்ஸ்சாண்டர் நிக்சன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தார்கள்.

அத்தோடு மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், சமூக பாதுகாப்பு அதிகார சபையின் வடக்கு கிழக்கு சிரேஷ்ட இணைப்பாளர் ப.பிரதீபன் மற்றும் பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர், சமூக பாதுகாப்பு சபையின் உத்தியோகத்தர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.

இந் நிகழ்வில் மாணவர்களுக்கு சான்றிதழ்களும், உத்தியோகத்தர்களுக்கு மெச்சுரைகளும் வழங்கிவைக்கபட்டன.