யாழ்ப்பாண மாவட்டச் செயலக சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்திப் பிரிவினால் பால்நிலைசார் வன்முறைக்கு எதிரான முதலாவது காலாண்டு செயற்குழுக் கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களின் தலைமையில் (27.02.2024) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் கருத்துத் தெரிவித்த அரசாங்க அதிபர் "பால் மற்றும் பால்நிலைசார் வன்முறைகளை குறைப்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமெனவும் வன்முறைப் போக்குகளை குறைத்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனக் குறிப்பிட்டதோடு, பிள்ளைகளை சிறுவயது முதல் சமூகம், கலாசாரம்,ஆன்மீகம், பண்பாடுகளுடன் இணைத்து வளர்க்கப்பட வேண்டுமெனவும் கருத்துத் தெரிவித்திருந்தார்.
அத்தோடு பால் மற்றும் பால்நிலை வன்முறைகளை குறைப்பதற்கான செயற்திட்ட முன்மொழிவுகள், பால்நிலைசார் வன்முறைகள் தொடர்பான முன்வைப்புக்கள் போன்ற விடயங்களும் ஆராயப்பட்டன.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள்,பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,உளவளத்துணை உத்தியோகத்தர்கள்,பொலிஸ் உத்தியோகத்தர்கள், கலாசார உத்தியோகத்தர்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களது பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.





