விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் விளையாட்டு அபிவிருத்தி திணைக்களம் என்பன இணைந்து நடாத்திய 48 வது தேசிய விளையாட்டுப் போட்டி ஜூன் மாதம் 27 ஆம் திகதி தொடக்கம் 30 ஆம் திகதி வரை யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைபெற்றது. இத்தேசிய உதைபந்தாட்ட விளையாட்டு விழாவின் இறுதி நாள் நிகழ்வு துரையப்பா விளையாட்டு அரங்கில் 30.06.2024 அன்று நடைபெற்றது.

இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக தற்போதைய விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளரும் யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபருமான திரு.க.மகேசன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

இவ் 48 ஆவது தேசிய விளையாட்டு விழாவில் மாகாணங்களுக்கு இடையில் நடைபெற்ற உதைபந்தாட்ட தொடரின் இறுதிப் போட்டியில் வடக்கு மாகாண அணியை எதிர்த்து மத்திய மாகாண அணி மோதிக்கொண்டது. இப்போட்டியில் வடக்கு மாகாண அணி வெற்றியை பெற்றுக்கொண்டது.

மேலும் இந்நிகழ்வில் விளையாட்டு அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் நாயகம், வடக்கு மாகாண பிரதம செயலாளர், யாழ் மாவட்ட பதில் அரசாங்க அதிபர், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர், வட மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள்; விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர், வட மாகாண விளையாட்டுத்துறை பணிப்பாளர், விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் விளையாட்டு அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள், விளையாட்டு பிரிவு உத்தியோகத்தர்கள், பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் பெருமளவான பார்வையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

 

449164938 1001523561372897 5892449953865233533 n 449202168 1001523724706214 1762516850162225249 n 449312179 1001527108039209 4515086178820362314 n 449315137 1001523614706225 6625889739668931684 n 449420595 1001524081372845 6498659701301611160 n 1 449434599 1001524278039492 6477883773018026467 n 449436653 1001536824704904 1676320897280111087 n 449434977 1001524598039460 7162822075661152962 n

449524513 1001523634706223 3120836318482577917 n 449539151 1001527044705882 8779086407209683549 n 449592161 1001522988039621 2433194192008221968 n 449598284 1001523468039573 8492047285507832954 n